">

Please wait...



ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின் அற்புதத் தன்மைக்......
Islamic | label other | access_time 08th Sat, Sep 2018

எது உலக அதிசயம் ???

உலகின் புதிய ஏழு அதிசயமாக
அறிவிக்கப்பட்டவற்றின்
பட்டியல் இதோ:

1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி
ஜெனீரோ நகரில் மலை
உச்சியில் உள்ள பிரமாண்ட
இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மாயன்
கட்டிடங்கள்.
7. ரோம் நகரின் கொலீசியம்.

இவைகள் நாமாகவே உருவாக்கியதும்,
அடிக்கடி மாற்றி
கொள்கிறவைதான்.
இது அதிசயமா?

ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின்
அற்புதத் தன்மைக் கண்ட
விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் என்றால் மிகையில்லை.

5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட
இக்கிணற்று நீரை, உலகில்
வாழும் பெரும்பாலான
முஸ்லிம்கள் அருந்தாமல்
இருந்திருக்க மாட்டார்கள்.
மக்காவிற்கு உலகின் பல
தேசங்களில் இருந்து புனித பயணம் வரும்
முஸ்லிம்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது தனது நாட்டிற்கு எடுத்து
கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான
இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி இங்கு காண்போம்.

‘ஜம் ஜம்’ என்றால் நில் நில்
என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பிய
மருத்துவர்கள்,
சுகாதாரத்திற்காக
இந்தகிணற்றினை சுத்தப்படுத்த
வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர்.
இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக
15 நாட்கள் இந்த நீரை இறைத்தது.
ஆனால் நீரின் அளவு குறையவில்லை !
மாறாக நீரின் மட்டம் ஒரு
அங்குலம் உயர்ந்து இருந்தது !

ஒரு வினாடிக்கு சுமார் 8000
லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி
ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றிலிருந்து
உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம்
ஜம்’ கிணற்றிலிருந்து
எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம் !

அதை விட அதிசயம் 691.2
மில்லியன் நீரை தினமும்
எடுத்தபோதும் இதன்
அளவு குறைவதில்லை !
சுவையும் மாறியதில்லை !

ஹஜ் காலத்திலும் ரமலான்
மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக்
கிணற்றில் இருந்து தான்
குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில்
அமந்துள்ளது.

இக்கிணற்றுக்கு அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லை !

அந்தக் கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது
என்பது முதலாவது
அற்புதமாகும் ,!

எந்த ஊற்றாக இருந்தாலும் சில/பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக
வற்றாமல் இருப்பது இரண்டாவது
அற்புதமாகும்.

ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.

எந்த ஒரு நீர் நிலையாக
இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை.
இதனால் தான் குளோரின்
போன்றமருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.
ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த
மருந்துகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும் !

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும்.
ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில்
சோதித்துப் பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு
மிகவும் ஏற்ற நீர்
என்று நிருபிக்கப்பட்டது.

பூமியிலுள்ள
நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள்
நாயகம் கூறியுள்ளார்கள்.

பொதுவாக மற்ற
நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய
வந்துள்ளது.

கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம்
தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக்
கொடுக்கக் கூடியவை.
இதை அனுபவத்தில்
உணரலாம்.

மேலும் இந்தத் தண்ணீரில்
ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளைஅழிக்க வல்லது.

அங்கே அற்புதம் நடக்கிறது. இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக்கூடது.

மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்படாத நம்பிக்கையை
அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப்
பயன்படுவதும், பாலைவனத்தில்
இந்த அதிசயம் பல்லாயிரம்
ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும்உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.

இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

குறிப்பு; மற்ற தண்ணீர்
பிடித்து வைத்தால் சில நாள்களில் கிருமிகள்
தென்படும்.
ஆனால் அல்லாஹ்வின்
அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர்
எத்தனை வருடம் பிடித்து
வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர் அதிசியம்தான்..........

பகிர்ந்து கொள்க என்று சொல்ல
தேவை இல்லை.
நல்ல விசயத்தை பகிர்ந்து
கொள்வது ஒவ்வொருவருக்கும்
கடமை ..!!!!

label Islamic | label other | access_time 08th Sat, Sep 2018



முக்கியச் செய்திகள்
அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் எக்ஸ்பிரஸ்
புதிய ரயில்
label other access_time 05th Fri, Oct 2018
தென்னம்பட்டி சுலைகா பீவீ
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sat, Apr 2018
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sun, Oct 2018
பீர்கலாம் மர்ஹீம் அப்துல் கபூர் முகமது அலி
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Tue, Apr 2020
இரண்டு மரணங்கள்,
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019