">

Please wait...



கத்தாரில் வீடுகளில் பணிபுரிபவர்களுக்கான புதிய சட்டம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது
கத்தார் | label other | access_time 24th Mon, Sep 2018

கத்தாரில் வீடுகளில் பணிபுரிபவர்களுக்கான புதிய சட்டம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது...!

கத்தார் அரசர் இச்சட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. புதிய சட்டத்தின்படி, கத்தாரில் வீட்டு வேலை செய்ய 18 முதல் 60 வயது வரையிலான பணியாளர்கள் நியமிக்கலாம்.

வீட்டுவேலை, தோட்டப்பராமரிப்பு, வீட்டுக்காவல், டிரைவர் போன்ற பணிகளில் பணியாளர்கள் நியமிக்கப்படலாம். இது தொடர்பாக வேலைக்கு வருவோருக்கும், வேலை தருவோருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

வேலைக்காரர்களுக்கு தினமும் பத்து மணி நேரம் வேலை, வாரம் ஒருநாள் விடுமுறை கட்டாயம் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், ஆடை வசதிகள் செய்துதர வேண்டும்.

மாத இறுதியில் சம்பளப்பணத்தை பணமாகவோ, பணியாளர் வங்கிக்கணக்கிலோ செலுத்தவேண்டும். பணிமுடிந்து திரும்புகையில் ஆண்டுக்கு மூன்று வார சம்பளப்பணத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.

பணியாளரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ சங்கடம் தரக்கூடாது. அவரது மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். பணியாளர் விதிமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் கத்தார்ரியால் அபராதமாக விதிக்கப்படும். இதேபோன்று பணியாளர்களும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நடந்துகொள்ளவேண்டும்.

வேலைக்கு வைத்துள்ளவர் ரகசியங்களை காக்கவேண்டும். அவர்கள் ஒப்புதலுடன் பிற பணிகளை செய்யலாம். கத்தார் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் இவ்வாறு புதிய பணியாளர் சட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதுதுகுறிப்பிடபது

label கத்தார் | label other | access_time 24th Mon, Sep 2018



முக்கியச் செய்திகள்
பள்ளபட்டி To பைபாஸ் வரை
ஜல்லிகட்டுக்கு ஆதரவு
label News access_time 21st Sat, Jan 2017
தர்மபுரி சித்தீக் நிஸா அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Wed, Apr 2020