">

Please wait...



பள்ளபட்டியிலிருந்து கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இன்று தனி லாரியில் நிவாரணப் பொருட்கள்.........
கஜா புயல் | label News | access_time 24th Sat, Nov 2018



பள்ளபட்டியிலிருந்து கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,
இன்று தனி லாரியில் நிவாரணப் பொருட்கள்.........



*கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மார்க்கட், மளிகை, உணவுப்பண்டங்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் பள்ளபட்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு தனி லாரியில் கொண்டு செல்லப்பட்டு நேரிடையாக விநியோகம் செய்யப்பட உள்ளது.*

*ஒரு லாரி நிவாரண பொருட்கள் ஓரிரு நாட்களில் சாத்தியமானதற்கு காரணம் பாப்புலர் எக்ஸ்ப்ரஸ், பள்ளி மாநகர் எக்ஸ்ப்ரஸ், கிங் ஆப் பள்ளபட்டி போன்ற எண்ணற்ற இணைய தள நண்பர்களின் ஆதரவுக்கரங்களே.*

*குறிப்பாக கெந்தபொடி சித்தீக் என்ற தனி நபரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. ஹாபில் PMK கலந்தர் King of Pallapatti யாசர் இவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.*

*கீழை நியூஸ் நிறுவனத்தார்க்கும், வெள்ளகோவில் புட் வேர் சங்கத்தினருக்கும், உயிர் மெய் இயற்கையகம் நிறுவனத்தார்க்கும் மற்றும் உதவிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.*


*இன்று காலை 10 மணியளவில் பள்ளபட்டி ஜமாத்துல் உலமா தலைவர் ஹபீப் நகர் பள்ளி இமாம் அல்ஹாஜ்.ஜைலானி ஹஜ்ரத் அவர்கள் துவாவுடன் நிவாரண பயணம் இனிதே துவங்கியது. பெரிய பள்ளி செயலாளர் ஹாஜி கூலாப்பா முகமது அலி,பாப்புலர் அபுத்தாஹிர், நிறங்கள் அஸ்கர் மற்றும் பலர் துவாவில் கலந்து சிறப்பித்தனர்*


*கெந்தபொடி சித்தீக் தலைமையில் களப்பணியாளர்கள் PMK கலந்தர்,ரஸ்வி ஆடியோஸ் ஹபீப், ஆட்டுக்கால் யாசர் அரபாத் இர்பானி,சமூக நல ஆர்வலர் வெஸ்ட் சேக் உள்ளிட்டோர் வாகனத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரில் களப்பணியாற்றிட செல்கின்றனர்*


இவர்களது உதவிப்பயணம் சிறப்புற வாழ்த்தும்


label கஜா புயல் | label News | access_time 24th Sat, Nov 2018



முக்கியச் செய்திகள்
AL-Falaq
சூரத்துத் தக்வீர்
label Others access_time 26th Sun, Apr 2020
எழுத்தாளர் s அர்ஷியா ஹூசைன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 08th Sun, Apr 2018
ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு
இன்று
label News access_time 12th Sun, Jan 2020
மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Sun, Sep 2018