">

Please wait...



பள்ளபட்டியில் டெங்கு தீவிரம்
இதை நமதூரில் தடுப்பதற்க்கு என்ன வழி | label News | access_time 19th Thu, Jan 2017

கடந்த நான்குநாட்களுக்குள் இருவர் தீவிரசிகிச்சை பிரிவில். செனயன் பசீர் அவர்களின் பேரன் டெங்கு பாதிப்பால் கரூர் செந்தில் குமாரிடம் காட்டி முடியாது என்றதால் கோவை குப்புசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் எதுவும் கூறமுடியும் என்று கூறிவிட்டனர். மேலும் நண்பர்கள் அவரவர் வீட்டில் குழந்தைகளுக்கான முழு கவணத்தை தங்களின் பணிக்கிடையில் சிரமமின்றி எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் எங்கோ வணிகம் செய்ய வடநாடு சென்றிருக்கிறோம். வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சமயம் குழந்தைகளிடத்தில் பக்குவமாக எடுத்து சொல்லுங்கள்....செருப்பின்றி விளையாடவேண்டாம்...,மண்களில் விளையாட வேண்டாம்..என்றும் அசுத்தமான இடங்களில் [சாக்கடை] ஓரங்களில் நிற்க்க வேண்டாம் என்றும் அன்போடு கூறுங்கள். மனைவிடத்தில் வீட்டிலும் சரி, பள்ளிக்கச் செல்லும் போதும் கொதிக்க வைத்த குடிநீரை கொடுக்கச் சொல்லுங்கள் படுக்கும் முன் கொசுக்கள் இல்லாதவாறு உறங்கச் செய்யுங்கள். அன்றாட நிகழ்வில் இது சகஜம் என்று அசால்டாக இருந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும் , மனைவிடத்திலும் ஞாபகமூட்டியவர்களாக இருங்கள். வருமுன் காப்போம்!

அல்லாஹ்தாலா நமதூரை ஆரோக்கியமாக வாழ கிருபை செய்வானாக! ஆமின்!
label இதை நமதூரில் தடுப்பதற்க்கு என்ன வழி | label News | access_time 19th Thu, Jan 2017



முக்கியச் செய்திகள்
சின்னாரத்த மர்ஹும் டாக்டர் அஷ்ரப் அலி மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019
பள்ளப்பட்டி ஆம்புலன்ஸ் சர்வீஸ்
ஜனாஸா சேவை மையம் &
label News access_time 27th Fri, Mar 2020
மெஹபூப் அலி ஹாஜியார் அவர்கள்..
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sun, Jul 2020
தலையூர் அப்துல் ரஹூப் (த.பெயர்:அப்துல் பாரி)....
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, May 2019