தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....
சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....
வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது.
100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து
கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும் எனவே நீதிமன்றம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 70 வயதான சகோதரன் வழக்கு தொடர்ந்தார்...
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. என்ன வந்தாலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்று அண்ணனும், கடந்த 40 வருடங்களாக அண்ணன் தந்தையை கவனித்து வருவதால் இனிமேலுள்ள காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் என்று தம்பியும் வாதம் செய்தனர்.
நீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினார். இருந்தாலும் ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டுமே....எனவே இனியுள்ள காலம் இரண்டு பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து கொள்ளலாமே என்ற கருத்தை சொன்னார். ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் படவில்லை.
நீதிபதி தந்தையிடம் கருத்து கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் எனக்கு வேற்றுமை காண முடியாது என்று அழுது கொண்டே சொன்னார்.
நீதிபதி மீண்டும் குழப்பத்தில்.....
கடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தனது தீர்ப்பைக் கூறினார். கடந்த 40 வருடங்களாக தந்தை பெரிய மகனின் கவனிப்பில் இருந்து வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு 80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், மேலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பு மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை இளைய மகனிடம் ஒப்படைக்கிறேன்.
தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய பெரிய மகன் நீதிபதியைப் பார்த்து, “ நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள்..
என்னுடைய சொர்க்க வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்....”
பெரிய மகனாகிய முதியவர் அழுது புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய செய்தியை சவுதி செய்தித் தாள்களும் ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன...
இந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நீதிபதி கூறினார்....
இதையும் செய்தித் தாள்கள் வெளியிட்டன.
தாய் தந்தையரை கால்பந்தைப் போல் அங்கும், இங்கும் தட்டி விளையாடுவதும், முதியோர் இல்லங்களில் அநாதைகளைப் போல் கொண்டு தள்ளுவதும் நடக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அபூர்வமான வழக்கு வந்ததை பார்க்கும் போதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு பிரபலமடைந்தது என்று தெரியும்.
தாய் தந்தையருக்கு சேவை செய்து சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
ஆமீன்!!
யா ரப்பில் ஆலமீன்!!!.
label சவுதி அரேபிய |
label News |
access_time
21st Fri, Dec 2018