">

Please wait...



ஓர் இரவில் 11,708 கோடி ரூபாய் ஜாக்பாட் லாட்டரி வென்று கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி!
ஒரே இரவில் கோடீஸ்வரராக முடியுமா? | label other | access_time 08th Sun, Sep 2019

ஒரே இரவில் கோடீஸ்வரராக முடியுமா? லாட்டரி அடித்தால் மட்டுமே அதற்கு வாய்ப்புண்டு. நாம் விளையாட்டாக சொல்லும் இந்த வாக்கியம் ஒருவர் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. வரலாறு காணாதப் பரிசுத்தொகையாக ரூ.11,708 கோடி அமெரிக்க லாட்டரியில் முதல் முறையாக விழுந்துள்ளது.


அமெரிக்காவில் பரவலாக பல லாட்டரிகள் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக ’மெகா மில்லியன்ஸ்’ என்னும் அமெரிக்க லாட்டரி நிறுவனம் பெரும் பரிசுத் தொகைகளை அறிமுகப்படுத்தி மக்களை கவர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குலுக்கல் மூலம் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுத்தொகையை வழங்குகின்றனர்.

ஜாக்பாட் எண் யாரிடமும் இல்லை என்றால், அந்தப் பரிசுத் தொகை சேர்ந்து, அடுத்த வாரம் ஜாக்பாட் பரிசாக அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த முறை இது வரை லாட்டரி நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தாத பரிசுத் தொகையான 1.6 பில்லயன் டாலர் ஜாக்பாட் தொகையாக உயர்ந்துள்ளது அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.11,708 கோடி.


இந்த லட்டரிக்கான குலுக்கல் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் 5, 28, 62, 65, 70 என்ற எண்ணிற்கு இந்த ஜாக்பாட் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை பெறாத இந்தத் தொகையை பெற்றவர் யார் என்கிற விவரம் அறிவிக்கப்படவில்லை.
தெற்கு கரோலினாவில் விழுந்த இந்த பரிசுத் தொகையை தவணையாக பிரித்து தரவுள்ளது இந்நிறுவனம். முதல் தவணையில் ஒரு பெரும் தொகையும் அதன் பின் மீதம் தொகையை 29 ஆண்டுகளுக்கு பிரித்து தருவதாகவும் அறிவித்துள்ளது.

2 மற்றும் 3 டாலர்களுக்கு விற்கப்பட்ட இந்த லாட்டரிகள் மால்கள், வணிக வளாகங்கள், பார்கள் என அனைத்து இடங்களிலும் விற்றுத் தீர்ந்தது. இந்த விற்பனையே நல்ல தொகையை பெற்று தந்துள்ளது.

இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு நடந்த குலுக்கல் லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.10 கோடி பரிசாக விழுந்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது பெற்ற பரிசு தொகையே அதிகபட்சம் ஆகும்.

தகவல் உதவி: தி ஹிந்து | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

label ஒரே இரவில் கோடீஸ்வரராக முடியுமா? | label other | access_time 08th Sun, Sep 2019



முக்கியச் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்...
label News access_time 26th Thu, Mar 2020
திண்டுகலாம் ஆதம்(டிரைவர் )
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Mon, Dec 2018
ஹாஜி அப்துல் பாரி
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Jan 2017