கொரோனாவின் கோரப்பிடி நேரத்தில் முஸ்லீம்கள் மருத்துவமனைகளின் அவசியத்தை உணர துவங்கி விட்டார்கள்.
பல ஊர்களில் முஸ்லீம்களுக்கு அவசர சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை பற்றி தெரிந்துக் கொண்டோம்.
நியாமான சேவை கட்டணம் வாங்க கூடிய, வியாபாரமாக இல்லாது, சேவையாக செயல் பட Multi Speciality Hospitals மாவட்டத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்றோ முஸ்லீம்களால் தொடங்கப்பட வேண்டும்.
இப்போது முடியாது என்றாலும், முயற்சியை தொடங்கினால் ஐந்து வருடம், பத்து வருட முயற்சியில் இன்ஷா அல்லாஹ் தொடங்கி விட இயலும்.
விடா முயற்சி வெற்றியளிக்கும் இன்ஷா அல்லாஹ்
கியூபா மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடை காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட கியூபா மக்களுக்கு சிகிச்சை செய்ய மருந்துகளை, மருத்துவர்களை அனுப்ப அதிபர் #ஃபிடல்_காஸ்ட்ரோ உலக நாடுகளிடம் மன்றாடினார். உலக ரவுடி அமெரிக்காவுக்கு பயந்து உலக நாடுகள் தயங்கிய போது, ஃபிடல் காஸ்ட்ரோ மருத்துவதுறையின் அவசியத்தை உணர்ந்து, சபதம் எடுத்து ஆயிரக்கணக்கான மருத்துவர்களையும், மருந்தக ஆராய்ச்சி கூடங்களை நிறுவினார் என்பது குறிப்பிடத் தக்கது.
Mohamed Madhar 14.04.2020
label பள்ளபட்டியில் |
label other |
access_time
15th Wed, Apr 2020