">

Please wait...



முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்
நாம் அனைவருக்குமானவர் | label other | access_time 18th Tue, Dec 2018

முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் பாகிஸ்தான் போகட்டும், முஸ்லிம்கள் போக வேண்டியது இல்லை என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் அதிரடி தாக்கு தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது....

பகவத் சிங்க்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை,
காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
இந்திர காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தனர், பிறகு அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள்.

தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம்... இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம், அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது.

இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு.
நாம் அசரப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா? முடியாது இது அனைவருக்குமான நாடு.
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான்.

கங்கை நதி அனைவருக்குமானது, ராமன் அனைவருக்கும் பொதுவானவன் அதே போல் முஹம்மது நபியும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லை நாம் அனைவருக்குமானவர்,
இந்த உலகமும் அனைவருக்குமானது.

இறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள் என்று விளாசி தள்ளியுள்ளார்.

Thanks - Idealvision Tnmedia

label நாம் அனைவருக்குமானவர் | label other | access_time 18th Tue, Dec 2018



முக்கியச் செய்திகள்
திருச்சி செல்லும் சில குறிப்பிட்ட ரயில்கள்
திருச்சி இஸ்திமா செல்லும் மக்கள் கவனத்திற்கு
label other access_time 23rd Wed, Jan 2019
முஹம்மது முஸ்தபா
மரண அறிவிப்பு
label Janaza access_time 08th Sun, Jan 2017