*காட்டாற்று வெள்ளம்*
~~~~~~~~~~~~~~~
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இந்த ஒரு வாரமாகவே பல செய்திகள் பள்ளபட்டி இளைஞர்களைப்பற்றித்தான்
படிக்கும்போதே நெஞ்சு பதைக்கிறது
நான் பெற்ற பிள்ளைக்காகத்தான் நான் பதற வேண்டும் என்றில்லை என் சமூகத்து பிள்ளைகளும் என் பிள்ளைகளை போன்றோரே ஏனோ தெரியவில்லை படித்துவிட்டு கடந்துபோகும் மனது எனக்கில்லை இப்படிப்பட்ட செய்திகளை படித்துவிட்டு எழும் கோபத்தை அடக்காமலும் இருக்க முடியவில்லை
நான் படிக்கும் காலத்தில் ஆரம்பப்பள்ளியோ மேல்நிலை பள்ளியோ வகுப்பாசிரியரின் மேசையில் கட்டாயம் மூங்கில் குச்சி இருக்கும்
ஆசிரியர் கற்றுத்தந்ததை விட அந்த மூங்கில் குச்சிகள் அதிக பாடங்களை சொல்லித்தந்தது பாடத்தை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் தான் ஆசிரியர்களுக்கும் அந்த சுதந்திரமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தது ஆனால் இன்றைய நிலைகளோ தலைகீழ் இதற்க்கு காரணமே பெற்றோர்தான்
நொண்டி வாத்தியாரிடம் காலிலே விலங்குகட்டைகளை சுமந்து சென்று படித்த மாணவர்கள் உருப்படாமலா போய்விட்டார்கள் அல்லது ஊனமாகி முடங்கிவிட்டார்களா?
தரையிலே கல்உப்பை கொட்டி அதிலே மணடியிட்டு படித்த மாணவர்களின் வரலாறும் உண்டு இன்னும் வினோதமான தண்டணை பெற்ற மாணவர்களின் வரலாறுகளும் உண்டு அது தற்சமயம் தேவையில்லாதது
இன்றைய இளைஞர்களின் அடாவடிப்போக்குக்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தால் முதல் குற்றவாளிகளாக பெற்றோரே எனது கண்ணுக்கு தெரிகின்றனர்
பிறந்ததுமுதல் Pre kg , Lkg , Ukgகளிலிருந்து ஆரம்பிக்கும் நமது பிரியங்கள் ஒற்றை வழிப்பதையிலேயே பயணிக்கிறது வெற்றுப்பிரியங்களும் பாசங்களும் நம் பிள்ளைகளை நல்ல மனிதராக்கிவிடுமா என்று சிந்திப்பதே இல்லை
*ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களை பார்த்துப்பார்த்து செதுக்கும் நீங்கள்* *அவர்களின் பருவ வயதை கையாள தெரியாமல் தடுமாறுவதேனோ?*
அன்றைய பெற்றோர்கள் குறிப்பாக தகப்பன்கள் பெரும்பாலும் கண்டிப்பு பேர்வழிகளாகவே இருந்திருக்கின்றனர்
அதுவும் தன் பிள்ளைகள் மீதிருந்த பிரியத்தினால்தான் என்பது தாமதமாக விளங்கத்தான் செய்தது
விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்
"டேய் அத்தா வர்ராருடா" என்ற சத்தம் கேட்டாலே இருக்குமிடம் தெரியாமல் ஒளிந்து வளர்ந்த காலங்களும் உண்டு
அதை இன்று நினைவில் வைத்திருப்போர்தான் யாருமில்லை
ஆனால் இன்று அத்தாவை பார்த்ததுமே ஏதாவது ஒரு புதிய பொருளை வாங்கி கொடுக்க சொல்லி பிடிவாதம் பிடிக்கும் நிலையில் தான் நாட்கள் நகர்கிறது
இந்த நிலையில் தீர்க்கமான முடிவெடுக்க துணியாத பெற்றோர்களே தலைகுணிந்து
போகவேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் இங்கே வசதி படைத்தவர்களை பற்றி எந்த பிரச்சனையுமில்லை லட்சங்களில் சிலவுசெய்யவும் , பிரச்சனை என்றால் அதை கையாளவும் தயங்க மாட்டார்கள்
பொருளாதாரத்தில் நடுநிலையான பெற்றோரே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்
சமீபத்தில் நடந்த பல விபத்துகளில் அதிகமான பெற்றோர் பண உதவிகேட்டு முகநூல் வாட்ஸப் போன்ற ஊடகங்களில் விளம்பரம் செய்தனர் அவர்களின் கண்ணீரும் ஆற்றாமையும் எத்தனை வேதனயக்குரியது
பெற்றோரே அடிபட்டவன் பிழைத்து வரவேண்டும் மீண்டும் நன்றாக நடமாட வேண்டும் என்ற பிரார்த்தனை ஒருபக்கமும் இவன் இப்படியே முடங்கிப்போய்விட்டால் என்ன செய்வது என்ற பரிதவிப்பு மறுபுறமுமாக உங்களை அனுஅனுவாக கொல்லுமே அதற்கான நிவர்த்திகள்தான் என்ன?
ஒரே வழிதான் சிறு வயதிலிருந்தே பிரியமும் பாசமும் ஊட்டி வளர்க்கும் நாம் தேவையான இடங்களில் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்கவே கூடாது இதுவும் அவர்கள் மீதான பிரியம் தான் கரிசனம் தான்
பொதுவாக ஒருவனின் விதிப்பிலிருப்பதை யாராலும் தடுக்க முடியாது ஆனால் நம் கண்ணுக்கு தெரிந்து நம் பிள்ளைகள் செய்யும் தவறை தட்டிக்கேட்காமல் விடுவது எவ்வளவு அபாயமானது, யோசித்துபாருங்கள்
பருவ வயதென்பது காட்டாற்று வெள்ளம் அது பாயும்போது கரைகளை தகர்த்தெரிய தயங்காது அதற்குமுன் அணகளை போட்டு தடுப்பது பெற்றோரின் கைகளிலே கரைகளை தகர்த்து ஊரை நாசம் செய்யுமுன் நாம்தான் உஷாரக இருக்க வேண்டும்
மனதில் பட்டது எழுதிவிட்டேன்
சாலையத்து
முஹமது உமர்ஷா
13-09-2019
label முஹமது உமர்ஷா |
label other |
access_time
14th Sat, Sep 2019